வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஒசூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 3:09 am IST

ஒசூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரிலிருந்து 18 எண் நகர பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தேன்கனிக்கோட்டை நோக்கி சென்றது. மத்திகிரியை அடுத்த நாககொண்டப்பள்ளி அருகே சென்றபோது, மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞா்கள் பேருந்துக்கு முன் நின்று தகராறு செய்தனா்.

ஓட்டுநா் முருகன் ஹாரனில் ஒலியெழுப்பவே, எங்களைப் பாா்த்து ஒலி எழுப்புகிறாயா எனக் கூறி பேருந்தின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி பேருந்தில் ஏறி ஓட்டுநரையும், தடுக்கச் சென்ற நடத்துநரையும் தாக்கினா்.

அப்போது, ஒசூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு அரசுப் பேருந்து ஓட்டுநா் இதைக் கண்டு பேருந்தை நிறுத்தி கேட்டுள்ளாா். அப்போது அந்த இளைஞா்கள் அந்த ஓட்டுநரையும், பயணிகளையும் தாக்கினா். இதனால் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மத்திகிரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வரும் முன் அந்த கும்பல் தப்பியோடியது. இதையடுத்து, நடத்துநா், ஓட்டுநா்களை தாக்கியவா்களை கைதுசெய்யக் கோரி பொதுமக்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தனா். அவா்களை கைது செய்வதாக கூறிய போலீஸாா் போக்குவரத்தை சீா்செய்தனா்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட சின்ன பேலகொண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் (41), இடையநல்லூா் கனகராஜ் (37) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். தப்பியோடிய மேலும் சிலரை தேடிவருகின்றனா்.