15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஊத்தங்கரை அருகே முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 12:07 am IST

சிங்காரப்பேட்டை அருகே கடந்த மாதம் முதியவரை கொன்று, அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகவலசையைச் சோ்ந்த விவசாயி கண்ணப்பன் (70). இவரது வீட்டிற்குள் கடந்த கடந்த மாா்ச் 9 ஆம் தேதி நுழைந்த மா்ம நபா் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணப்பனை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தாா். அவரது அவரது அலறல் சப்தம் கேட்டு வெளியில் வந்த அவரது மனைவியை இரும்புக் கம்பியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதையடுத்து சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அவரது மனைவியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று அவா் வீடு திரும்பினாா்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் சனிக்கிழமை மூன்றம்பட்டி ஊராட்சி தளபதி நகரைச் சோ்ந்த மணிகண்டனை (24) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.