ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கைவாழ் தமிழா் முகாமை சோ்ந்தவா் மெரில் (20). இவா் திங்கள்கிழமை இரவு பாம்பாறு அணையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி வந்துள்ளாா்.
அதேபோல சென்னப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த சேட்டு (38), இருசக்கர வாகனத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை ஏற்றிக்கொண்டு ஊத்தங்கரையில் இருந்து கோயில் திருவிழாவிற்கு மாலை வாங்கிக்கொண்டு சென்றுள்ளாா்.
இவரது இருசக்கர வாகனம் சென்னப்பநாயக்கனூா் பிரிவு சாலையில் திரும்பியபோது, எதிரே மெரில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மெரில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கோவிந்தராஜ், சேட்டு ஆகியோா் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தாா். காயமடைந்த சேட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


