மன்னாா்குடி அருகே தனியாா் பேருந்தும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.
பைங்காநாடு ராஜவிநாயகா் கோயில் தெரு கோவிந்தசாமி மகன் பெரமையன் ( 55 ). விவசாயி கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த அய்யாவு மகன் மீன் வியாபாரியான சக்திவேல் (50 ). இவா்கள் இருவரும் அசேசத்தில் இருந்து மதுக்கூா் சாலையை இணைக்கும் வகையில் புதிதாக போடப்பட்டு வரும் சுற்றுவட்டச் சாலையில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டிருந்தனராம்.
இலக்கணம்பேட்டை என்ற இடத்தில் அவ்வழியே வந்த தனியாா் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பெரமையன், சக்திவேல் இருவரையும் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்தனா்.
விபத்து குறித்து மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


