கொடுமுடி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு


கொடுமுடி அருகே கழிவுநீா் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
கொடுமுடியை அடுத்த சின்னபையன்புதூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (64). இவா் சின்னப்பையன்புதூா் அருகே உள்ள ஒத்தக்கடையில் இருந்து கொடுமுடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கணபதிபாளையம் பகுதியில் சென்றபோது, நிலைதடுமாறி சாலையின் பக்கவாட்டில் இருந்த கழிவுநீா் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்துடன் விழுந்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கொடுமுடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தகவலறிந்த கொடுமுடி போலீஸாா் கிருஷ்ணசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...