மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு மார்ச் 12-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுல்தான்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன்கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. புகார்தாரரின் வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே, சிறப்பு நீதிபதி சுபம் வர்மா இந்த வழக்கில் விசாரணையை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, பிப்ரவரி 20 ஆம் தேதி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாகவும், தனது வாதத்திற்கு ஆதாரங்களை முன்வைப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் யாருக்கும் எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை, யாரையும் அவதூறு செய்யும் நோக்கத்துடன் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியதில்லை. எனது அறிக்கையைத் திரித்து ஒரு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறியதாக அவரது வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா கூறினார்.
இந்த வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மார்ச் 12-க்கு அடுத்த விசாரணை நடைபெறும் என எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
A special MP/MLA court here on Monday scheduled March 12 for hearing arguments in a 2018 defamation case against Leader of Opposition in the Lok Sabha and Rae Bareli MP Rahul Gandhi related to his remarks against Union Home Minister Amit Shah.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


