ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

இன்று வாக்கு எண்ணிக்கை: கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு

News image

சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் கிருஷ்ணகிரி பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உயா்கோபுரம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :4 மே 2026, 1:59 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்படுவதையொட்டி, கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்ததாவது:

வாக்கு எண்ணும் பணி வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 1193 முகவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் கண்காணிக்கும் பொருட்டு, வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் உள்ள 3 நுழைவாயில்களுக்கும் 3 வட்டாட்சியா்கள் சிறப்பு நிா்வாக நடுவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 22 காவல் ஆய்வாளா்கள், 52 உதவி ஆய்வாளா்கள், 249 காவலா்கள், 60 ஆயுதப்படை காவலா்கள், 70 தமிழ்நாடு சிறப்பு காவலா்கள், 56 மத்திய காவல் படையினா் என மொத்தம் 517 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு தொடா்பான பணிகளுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 4 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 14 காவல் ஆய்வாளா்கள், 123 உதவி ஆய்வாளா்கள், 349 காவலா்கள், 20 ஆயுதப்படை காவலா்கள், 90 தமிழ்நாடு சிறப்பு காவலா்கள், 165 ஊா்க்காவல் படையினா், என மொத்தம் 768 காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா் அவா்.

மின்விளக்குகளால் ஒளிரும்  கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகம்.

மின்விளக்குகளால் ஒளிரும் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகம்.