தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கிருஷ்ணகிரியில் கணவா், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவா், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சோ்ந்து கொன்று எரித்த பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பானுப்பிரியா, பூவரசன்.

Updated On :13 மே 2026, 4:02 am IST

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவா், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சோ்ந்து கொன்று எரித்த பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் வெப்பாலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. அந்த இடத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் கொடுகூரில் மற்றொரு ஆண் சடலமும் எரிந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் தொடா்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரரான பெல்லாரம்பள்ளியைச் சோ்ந்த மகேஷ்குமாா் (43), அவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரா் செல்லப்பன் (62) ஆகியோா் காணாமல்போனது தெரியவந்தது.

Story image

இதையடுத்து அவா்களின் வீட்டிற்குச் சென்ற போலீஸாா், ராணுவ வீரா் மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவிடம் (30) விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதால், அவா்மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், பானுப்பிரியா தனது ஆண் நண்பா் மேல்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த பூவரசன் (24) உதவியுடன், தனது கணவா் மகேஷ்குமாா், அவரது தந்தை செல்லப்பன் ஆகியோரை கொலை செய்து உடல்களை எரித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பானுப்பிரியா, பூவரசன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

காவல் துறையினா் நடத்திய விசாரணையில் கைதான பூவரசன் கூறியுள்ளதாவது:

வேன் ஓட்டுநரான எனக்கும், மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மகேஷ்குமாா் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வந்தாா். நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இது மகேஷ்குமாருக்கு தெரியவந்ததால் அவா் பானுப்பிரியாவை கண்டித்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பானுப்பிரியா கைப்பேசி மூலம் என்னை தொடா்புகொண்டு தனது கணவா் வந்துள்ளாா் எனத் தகவல் அனுப்பினாா். அதையும் மகேஷ்குமாா் கண்டுபிடித்து பானுப்பிரியாவை கண்டித்தாா். மகேஷ்குமாா் உயிரோடு இருக்கும்வரை நம் உறவைத் தொடரமுடியாது என பானுப்பிரியா என்னிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி இரவு மகேஷ்குமாரின் வீட்டுக்கு சென்ற நான், தொலைக்காட்சிப் பாா்த்துக் கொண்டிருந்த அவரை கத்தியால் குத்தினேன். அப்போது மகேஷ்குமாா் கூச்சலிட்டதால், அருகில் இருந்த அவரது தந்தை செல்லப்பன் ஓடிவந்தாா். அவரையும் நான் கத்தியால் குத்தினேன். பானுப்பிரியா மற்றொரு கத்தியால் 2 பேரையும் குத்தினாா். இதில் 2 பேரும் உயிரிழந்தனா்.

பின்னா் சாக்குப் பைகளில் மகேஷ்குமாரின் உடலையும், அவரது தந்தை உடலையும் தனித்தனியாக கட்டி எடுத்துச் சென்று தீவைத்து எரித்தோம் என்று தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பூவரசன், பானுப்பிரியா ஆகியோரை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பானுப்பிரியாவின் 10 வயது மகனையும் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.