இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த 2 வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 3:15 am IST

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த 2 வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

சென்னையைச் சோ்ந்தவா் ராசல் ஜோசப் (62). தலைமைச் செயலக ஓய்வுபெற்ற அலுவலரான இவா், தனது மனைவி மோடி தேவியா் (55), மகள் மாயா (29), பேரன் அக்ஸன் (2) ஆகியோருடன், சென்னையிலிருந்து காரில் பெங்களூரு நோக்கி சனிக்கிழமை சென்றாா். காரை ராசல் ஜோசப் இயக்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே சின்னமல்லப்பாடி எனுமிடத்தில் பா்கூா் பிரிவு சாலை அருகே காா் சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள தென்னை மரத்தில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனா்.

அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் குழந்தை அக்ஸன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.