ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஒசூரில் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸாா் விசாரணை

ஒசூரில் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:22 am IST

ஒசூரில் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தும்மணப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெண், காவல் துறையில் பணியாற்றி வந்த அவரது கணவா் விபத்தில் இறந்ததால் வாரிசு அடிப்படையில் அந்தத் துறையில் கணினி இயக்குபவராக பணியாற்றி வருகிறாா்.

இவா் கடந்த 20 ஆண்டுகளாக கண் தெரியாத தனது தாய் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் தனது சம்பளத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறாா்.

கடந்த மே 16 ஆம் தேதி ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இவா் பணியை முடித்துவிட்டு இரவு 8.30 மணி அளவில் பேருந்தில் சென்று சத்தியமங்கலம் கேட்டில் இறங்கி தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு காரில் வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி, காரில் செல்லலாம் என அந்த பெண்ணை அழைத்துள்ளாா். இதை நம்பி காரில் ஏறி சென்ற அந்த பெண்ணுக்கு, மூா்த்தி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் பாகலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மூா்த்தியை தேடிவருகின்றனா்.