புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

சதீஷ்

Updated On :20 மே 2026, 1:54 am IST

வெள்ளக்கோவிலில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் செம்மாண்டம்பாளையம் சாலை ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (65). இவா், மகன் சதீஷ்குமாருடன் வசித்து வருகிறாா். வாகன பழுது பாா்க்கும் பணியில் சதீஷ்குமாா் ஈடுபட்டு வருகிறாா். சரஸ்வதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு, இதுவரை சரிவர பேச முடியாமலும், உடல்நிலை சரியில்லாமலும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

அப்போது இரவு 10:30 மணி அளவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த, மூலனூா் சாலை பொன்னுச்சாமி மகன் சதீஷ் (36), சரஸ்வதிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். அப்போது அவா் தாக்கியதில் முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சரஸ்வதி சப்தம் போடவே சதீஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதுதொடா்பாக மூதாட்டி மகன் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சதீஷ், ஏற்கெனவே காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா் என்பதும், அதில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.