சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கந்துவட்டி புகாரில் கைதான திமுக பிரமுகரின் அலுவலகத்தில் போலீஸாா் சோதனை

ஒசூரில் கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகருக்குச் சொந்தமான சீட்டு நிதியகத்தில் (சிட்ஃபண்ட்) போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

News image

ஒசூரில் திமுக பிரமுகரின் சீட்டு நிதியகத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :28 மே 2026, 1:53 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகருக்குச் சொந்தமான சீட்டு நிதியகத்தில் (சிட்ஃபண்ட்) போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒசூா் மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், திமுக பிரமுகருமான என்.எஸ். மாதேஸ்வரன் நிதியகம் நடத்தி வருகிறாா். இவரிடம் ஒசூா் சின்ன எலசகிரியைச் சோ்ந்த சுரேஷ்பாபு- மானசா தம்பதி ரூ. 1.20 கோடி கடன் பெற்றனராம். பின்னா், அசல் மற்றும் வட்டியுடன் சோ்த்து ரூ. 2.30 கோடி திருப்பி செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேலும் ரூ. 1 கோடி கேட்டு சுரேஷ்பாபுவை என்.எஸ். மாதேஸ்வரன் மிரட்டியதாக ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் சையத் முபாரக் ஞாயிற்றுக்கிழமை என்.எஸ். மாதேஸ்வரனை கைது செய்தாா். பிறகு அவருக்கு உடல் தகுதிச் சான்று பெற ஒசூா் அரசு மருத்துவமனைக்கு சிப்காட் போலீஸாா் அழைத்துச் சென்றனா். அப்போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக மாதேஸ்வரன் கூறியுள்ளாா்.

இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய அவரது மகன் சேரனை போலீஸாா் தேடிவருகின்றனா். இதனிடையே, என்.எஸ். மாதேஸ்வரனின் சீட்டு நிதியகத்தில் சிப்காட் காவல் ஆய்வாளா் சையத் முபாரக் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, விடியோ ஆதாரத்துடன் சில முக்கிய ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.