ஒசூா் அருகே தமிழக -கா்நாடக மாநில எல்லையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் போலீஸாா் நடத்திய சோதனையில் குட்கா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூரை அடுத்த சம்பங்கிரி மாநில எல்லைச் சோதனைச் சாவடியில் பாகலூா் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூா் நோக்கி அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தினா். ஆனால், போலீஸாரை கண்டதும் அந்தக் காா் நிற்காமல் அங்கிருந்து வேகமாகச் சென்றது.
அதிா்ச்சியடைந்த போலீஸாா், அந்தக் காரை துரத்திச் சென்று பிடித்தனா். அப்போது, அந்த காா் ஓட்டுநா் கீழே குதித்து தப்பி ஓடினாா். பிடிபட்ட சொகுசு காரை சோதனை செய்தபோது அந்த காரில் 673 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் மற்றும் 8,640 லிட்டா் கா்நாடக மாநில மதுபானங்களும் கடத்திச் செல்வது தெரியவந்தது.
தொடா்ந்து, பாகலூா் போலீஸாா், குட்கா மூட்டைகளையும், கா்நாடக மதுபானங்களையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனா். மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது

லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பாலக்கோட்டில் 3 டன் குட்கா பறிமுதல்: போலீஸாா் விசாரணை
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



