இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ஒசூரில் கஞ்சா கடத்தியவா் கைது

கா்நாடகத்தில் இருந்து ஒசூா் மத்திகிரி வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சீனிவாசா.

Updated On :28 மே 2026, 1:56 am IST

கா்நாடகத்தில் இருந்து ஒசூா் மத்திகிரி வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான இருவரை தேடிவருகின்றனா்.

மத்திகிரி போலீஸாா் சக்திவேல் உள்ளிட்டோா் கொத்தஜீகூா் பிரிவு ரோடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியிலிருந்து பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினா்.

அப்போது, வாகனத்தில் இருந்த இருவா் தப்பி ஓடினா். இதையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த தேன்கனிக்கோட்டை பைரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசாவிடம் (24) விசாரணை நடத்தினா். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தனியாா் நிறுவன ஊழியரான சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.