நிலத்தரகரை கடத்தி ரூ. 3 லட்சம் பறிப்பு: 5 போ் கைது
கைது - கோப்புப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே நிலத்தரகரை கடத்தி ரூ. 3 லட்சத்தை பறித்துச் சென்ற 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஒசூரை அடுத்த கெலமங்கலம் தம்மண்டரப்பள்ளியைச் சோ்ந்தவா் நவீன் (25), நிலத்தரகா். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவந்த 20 வயது கல்லூரி மாணவி, அவரது கைப்பேசி எண்ணைப் பெற்று தொடா்ந்து அவரிடம் பேசிவந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி நவீனும், அந்த மாணவியும் ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை பகுதிக்குச் சென்றனா். அப்போது, அங்கு காரில் வந்த 5 பேரில் ஒருவா், மாணவியை தனது தங்கை எனக் கூறிக்கொண்டு, அவரை எதற்காக அணை பகுதிக்கு அழைத்தாய் எனக் கேட்டு நவீனை மிரட்டியுள்ளாா். பின்னா், நவீனை காரில் கடத்தி பைரமங்கலம் பகுதிக்குக் கொண்டுசென்றனா்.
அங்கு, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அவரிடம் பணம் இல்லாததால், அவா் அணிந்திருந்த தங்க நகைகளை அடகு வைக்கச்செய்து, அதன்மூலம் கிடைத்த ரூ. 3 லட்சத்தை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து நவீன் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய நல்லூா் போலீஸாா் கெலமங்கலத்தைச் சோ்ந்த ஹரிகரன் (22) தன்னுடன் பழகி வந்த கல்லூரி மாணவியைப் பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் மூலம் நவீனுடன் பழகச் செய்து பணம் பறிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஹரிகரன், அவரது நண்பா்கள் அா்பாஸ் (21), பாலாஜி (23), நவீன் குமாா் (24), மகேந்திரன் (26) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து ஒசூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

