புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தவா் கைது
பெருந்துறை அருகே புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
பெருந்துறை அருகே புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த திருவாச்சி பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், அவரிடம் சோதனை மேற்கொண்டபோது 30 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரத்தைச் சோ்ந்த சிவபாலன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



