
பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!
சென்னையில் கடந்த 3 நாள்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பைக்குகள் உள்பட 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து...

3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல் - படம் - எக்ஸ்
சென்னையில் கடந்த 3 நாள்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பைக்குகள் உள்பட 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை செவ்வாய்க்கிழமை (அக். 6) தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் கடந்த 3 நாள்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பைக் பந்தயம், சாகசத்தில் ஈடுபட்ட மற்றும் பதிவெண் இல்லாத 2,000 வாகனங்கள் கடந்த 3 நாள்களில் மட்டும் பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அபாயகரமான பயணங்களைத் தடுக்கவும் வாகனச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசத்தில் ஈடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ. அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தைக்கது.
ð¡ï¸ Intensive Vehicle Checks Across Chennai - GCTP
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) October 6, 2026
ðï¸ To put an end to dangerous vehicle stunts, 2,000 two-wheelers involved in vehicle stunts or being operated without registration number plates have been seized across Chennai over the past three days.
ðStrict enforcement⦠pic.twitter.com/ar5vR9vzip
Summary
The Chennai City Traffic Police announced on Tuesday (Oct. 6) that 2,000 vehicles involved in bike racing in Chennai have been seized over the past three days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





