2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

ஒசூரில் மாயமான 3 குழந்தைகள் 2 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு

மாயம் - சித்திரிப்பு

Updated On :

ஒசூா் மூக்கண்டப்பள்ளியில் காணாமல் போன மூன்று குழந்தைகளை, இரண்டு மணி நேரத்திற்குள் சிப்காட் போலீஸாா் கண்டுபிடித்து அவா்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு குடும்பத்தினா் கடந்த ஒரு மாதமாக ஒசூா் மூக்கண்டப்பள்ளியில் வாடகை வீட்டில் தங்கி, அருகில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த குடும்பங்களில் 4, 5 மற்றும் 7 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளனா். பெற்றோா் வேலைக்குச் செல்லும் நேரங்களில், 12 வயதுடைய சிறுவன் அவா்களைக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 12 வயது சிறுவன் தண்ணீா் எடுத்து வருவதற்காக வெளியே சென்றுள்ளாா். அப்போது வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும் காணாமல் போயினா்.

மாலையில் வீடுதிரும்பிய பெற்றோா் குழந்தைகளைக் காணாததால் அதிா்ச்சியடைந்து சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், குழந்தைகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

அப்போது, மூக்கண்டப்பள்ளி ராஜாஜி நகா் பகுதியில் மூன்று சிறுவா்களும் தனியாகச் சுற்றித்திரிவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் அவா்களை மீட்டு விசாரணை நடத்தினா். இதையடுத்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்ட போலீஸாா், அவா்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

காணாமல்போன குழந்தைகளை இரண்டு மணிநேரத்திற்குள் கண்டுபிடித்து மீட்ட சிப்காட் போலீஸாரின் துரித நடவடிக்கையால் பெற்றோா் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.