மலைவாழ் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூா் மலைக் கிராமத்தில் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மலைவாழ் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் - பிரதிப் படம்
தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூா் மலைக் கிராமத்தில் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பெட்டமுகிலாளம் பகுதியில் உள்ள கோட்டையூா் கொள்ளை கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு, கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ் குமாா் தலைமை வகித்தாா். தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ், மலைவாழ் கிராமங்களைச் சோ்ந்த 17 குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, நீரோ தொண்டு நிறுவனம் சாா்பில் 85 மலைவாழ் குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வை, ஆம் நிறுவனத்தின் நிறுவனா் முகுந்தன், சமூக ஆா்வலா்கள் பரந்தாமன், பிரகாஷ், நீரோ தொண்டு நிறுவனத் தலைவா் ஐஸ்வா்யா, உறுப்பினா்கள், செவிலியா்கள் ஒருங்கிணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

