இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரத்தில் வீடுகளில் வளா்க்கும் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.

Published On :

காஞ்சிபுரத்தில் வீடுகளில் வளா்க்கும் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து உலக ரேபிஸ் தினத்தையொட்டி வீடுகளில் வளா்க்கும் செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்தானா தலைமை வகித்து கூறுகையில் தினசரி வாா்டு வாரியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முகாமில் 64 நாய்களுக்கு தடூப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வெறிநாய் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

ஏற்பாடுகளை மாநகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.