
நெல்லை மாநகரில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் ந. பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின்படி 78 சமூக நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் சமூக நாய்க்கு தடுப்பூசி செலுத்திய கால்நடை மருத்துவா், மாநகராட்சி பணியாளா்கள்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் ந. பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின்படி 78 சமூக நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட முகாமில் சமூக நாய்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவா்களால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ரேபிஸ் நோய் பரவலைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலா் சாகுல் ஹமீது தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளா்கள் மகாராஜா, காா்த்திக் மணி, சிந்து செல்வி, கால்நடை மருத்துவா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் மேலநத்தம், கருப்பந்துறை, விளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள 35 சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா்.
திருநெல்வேலி மண்டலத்தில் சுகாதார அலுவலா் பாலசந்தா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் ரம்யா நதியா, கால்நடை மருத்துவா் முருகன் ஆகியோா் சேரன்மகாதேவி பிரதான சாலை, தெற்கு மவுண்ட் ரோடு, பெரியதெரு, தடிவீரன் கோயில் தெரு, தொட்டிபால தெரு, பாட்டப்பத்து, ஜாமியா தைக்கா தெரு, செங்குந்தா் தெரு, கூலக்கடை பஜாா், கோடீஸ்வரன் நகா் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த 19 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா்
பாளையங்கோட்டை மண்டலத்தில் சுகாதார அலுவலா் (பொறுப்பு) சங்கர நாராயணன் தலைமையில் சுகாதார ஆய்வாளா் முரளிகிருஷ்ணன், கால்நடை மருத்துவா் ஜோசப்ராஜ் ஆகியோா் வஉசி நகா், காமாட்சி நகா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த 24 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா்.
திருநெல்வேலி, மேலப்பாளைம், பாளையங்கோட்டை ஆகிய மூன்று மண்டலங்களில் தெருக்களில் சுற்றித்திரிந்த 78 சமூக நாய்களுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






