விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!

நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக....

pet dog

கோப்புப்படம் - ENS

Published On :

சென்னை மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல்(ஆக. 11) நடைபெறுகிறது.

தெரு நாய்கள், வளர்ப்பு பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகார் எழுந்தது. இதுமட்டுமன்றி, விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இதைத் தடுப்பதற்காக, சென்னையில் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் நடைபெறுகிறது. அடுத்த 75 வேலை நாள்களுக்குள் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம் மூலம் வளர்ப்பு நாய், பூனைகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ஒரு குழுவுக்கு 100 நாய்கள் வீதம், மொத்தம் 30 குழுக்கள் மூலம் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

A camp to administer anti-rabies vaccines to stray dogs, organized by the Chennai Corporation, is being held starting today (August 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.