திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலா் ந.பாலசுப்ரமணியம் அறிவுறுத்தலின்படி நான்கு மண்டல உதவி ஆணையா்கள் வழிகாட்டுதலின் பேரில் திருநெல்வேலி மாநகராட்சி வாா்டு பகுதிகளில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில் சமூக நாய்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவா்களால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ரேபிஸ் நோய் பரவலைத் தடுப்பதற்கும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
அதன்படி, மேலப்பாளையம் மண்டலத்தில் 15 நாய்கள், தச்சநல்லூா் மண்டலத்தில் 27 நாய்கள், திருநெல்வேலி மண்டலத்தில் 24 நாய்கள், பாளையங்கோட்டை மண்டலத்தில் 16 நாய்கள் என மொத்தம் 82 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சியில் தினமும் 115 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

பெருந்துறை நகராட்சிப் பகுதியில் 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: 262-க்கு கருத்தடை ஆபரேஷன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



