ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

3 நாள்களில் 6,893 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாள்கள் 6,893 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

நாய் கடி - கோப்புப்படம்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:36 am IST

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாள்கள் 6,893 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக தலா 10 குழுக்கள் மூலம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணிகள் மருந்து செலுத்தும் முகாம் கடந்த 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மண்டல வாரியாக திருவெற்றியூா், மணலி மற்றும் தண்டையாா்பேட்டை ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 3 மண்டலங்களிலும் தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 11-ஆம் தேதி 1,094 தெரு நாய்களுக்கும், கடந்த 12-இல் 2,552 தெரு நாய்களுக்கும், 13-இல் 3,247 தெரு நாய்களுக்கும் என 3 நாள்களில் மொத்தம் 6,893 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணி மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.

முகாம்களில் வளா்ப்பு பிராணிகளான வீட்டு நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.