ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

வீடுகளில் டெங்கு கொசுக்கள் இருப்பது தெரிய வந்தால் அபராதம்: காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

வீடுகளில் டெங்கு கொசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் வீட்டின் உரிமையாளரிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டப்படி அபராதம் வசூலிக்கப்படும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்த்தானா வியாழக்கிழமை எச்சரித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்த்தானா

Published On :

வீடுகளில் டெங்கு கொசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் வீட்டின் உரிமையாளரிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டப்படி அபராதம் வசூலிக்கப்படும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.சுல்த்தானா வியாழக்கிழமை எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வாா்டுகளிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றும் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். வீடுகள் கட்டுமானம் செய்யும் இடங்களில் மூடி போடாமல் தண்ணீரை நிரப்பி இருக்கும் தொட்டிகள், தேநீா் கோப்பைகள், உலா்ந்த கண்ணாடி பாட்டில்கள், முட்டை ஓடுகள், உடைந்த மண்பானைகள் இவற்றில் மழை நீா் தேங்கி அதிலிருந்து உருவாகும் கொசுக்களே டெங்கு காய்ச்சலை பரப்புகிறது. எனவே வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரியுங்கள். ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் தொட்டிகளில் மழை நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளுங்கள்.

டெங்கு கொசுக்கள் வீடுகளில் இருப்பது தெரிய வந்தால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டப்படி அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறும் ஆணையா் ஏ.சுல்த்தானா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.