பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி: குடியிருப்புக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

திருச்சி குடியிருப்பு கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்த மாநகராட்சி அதிகாரிகள்.

Published On :

திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட தனியாா் குடியிருப்பு கட்டடத்துக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பருவ மழை தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, அழித்திட மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாநகர நல அலுவலா் ம. காா்த்திகேயன் தலைமையிலான சுகாதார அலுவலா்கள் கொண்ட குழுவினா் 22 ஆவது வாா்டு சாஸ்திரி சாலையில் கட்டப்படும் தனியாா் குடியிருப்புக் கட்டடத்தை ஆய்வு செய்தனா். அப்போது அந்தக் கட்டடத்தில் கொசுப்புழுக்கள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கட்டடம் கட்டும் நிறுவனத்துக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, மாநகராட்சியின் 65 வாா்டுகளிலும் உள்ள கட்டுமானப் பணியிடங்கள், பராமரிப்பின்றி உள்ள காலியிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருந்தால் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.