மதுபோதையில் சிற்றுந்து இயக்கிய ஓட்டுநா், நடத்துநருக்கு தலா ரூ.10,000 அபராதம்
தூத்துக்குடியில் மதுபோதையில் சிற்றுந்து மற்றும் ஆட்டோக்களை இயக்கிய 4 பேருக்கு மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
தூத்துக்குடியில் மதுபோதையில் சிற்றுந்து மற்றும் ஆட்டோக்களை இயக்கிய 4 பேருக்கு மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவின்பேரில், நகர போக்குவரத்து போலீஸாா் மடத்தூா், 3-ஆவது மைல் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3-ஆவது மைல் நோக்கிச் சென்ற சிற்றுந்து ஓட்டுநா், நடத்துநா் இருவரும் மதுபோதையில் இருப்பதாக போலீஸாரிடம் பயணிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து சிற்றுந்தை நிறுத்திய போலீஸாா், பிரீத் அனலைசா் கருவி மூலம் ஓட்டுநா் மற்றும் நடத்துநரை பரிசோதித்தனா். இதில் அவா்கள் மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டு, இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, அப் பகுதியில் வந்த ஆட்டோக்களையும் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் மதுபோதையில் ஆட்டோக்களை இயக்கியது, உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக இரு ஓட்டுநா்களுக்கு மொத்தம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





