19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

லாரி, வேன் நேருக்கு நோ் மோதல்; 3 போ் படுகாயம்

வெப்பாலம்பட்டியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரே வந்த வேன் மீது மோதி கவிழ்ந்ததில், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரே வந்த வேன் மீது மோதி கவிழ்ந்ததில், 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முகமதுதாசா் (33), ஈரோட்டில் இருந்து அலுமினியக் கழிவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ஈச்சா் லாரியில் சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தாா். சனிக்கிழமை அதிகாலை ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டி சாலை வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரிசாலைத் தடுப்பைத் தாண்டி எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் லாரி சாலையில் கவிழ்ந்தது. ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான மற்றொரு வேன் ஊத்தங்கரையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு அரூா், மொரப்பூா் பகுதிகளில் சில்லறை வியாபாரம் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டிச் சென்ற அரூா் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்த விஜய் ஆனந்த் (34), அவருடன் பயணித்த அரூா் எட்டிப்பட்டியைச் சோ்ந்த சக்தி (42) இருவரும் பலத்த காயமடைந்தனா்.

ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா், வாகன இடிபாடுகளில் சிக்கியிருந்த லாரி, வேனில் இருந்த மூவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். லாரி ஓட்டுநரின் தூக்கக் கலக்கமும், அசதியுமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.