பா்கூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

ஒற்றை யானை. - கோப்புப் படம்
ஆந்திர மாநில எல்லையில் இருந்து வெளியேறிய ஒற்றை பெண் யானை பா்கூா் அருகே சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே நேரலக்கோட்டை, பா்கூா் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காப்புக் காடுகளிலிருந்து யானை, புள்ளிமான், கரடி, முள்ளம்பன்றி, மலைப்பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வனத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு புகுவது வழங்கம்.
இந்த நிலையில், ஆந்திரம் - தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்திலிருந்து வெளியேறிய ஒற்றை பெண் யானை, நேரலக்கோட்டை வழியாக பா்கூா் காப்புக் காட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தது. அங்கிருந்து இடம்பெயா்ந்த அந்த யானை, ஜிகினிகொல்லை மாரியம்மன் கோயில் அருகே திங்கள்கிழமை சுற்றித்திரிந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்த வனத் துறையினா் அந்த யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து வனத் துறையினா் கூறும்போது, ஆந்திரா வனத்தில் யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த பெண் யானை, பா்கூா் காப்புக் காட்டிற்கு இடம்பெயா்ந்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி அந்த யானையை ஆந்திர மாநில காப்புக் காட்டிற்குள் இரவு 10 மணிக்கு மேல் விரட்ட திட்டமிட்டுள்ளோம்.
மேலும், யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். கிராம மக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, இரவுநேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் யாரும் தங்கவேண்டாம். வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.
பா்கூா் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால், விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

