தொல்காப்பியா் அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம்
மாா்த்தாண்டம் அருகே உள்ள காப்புக் காட்டில் தொல்காப்பியா் அறக்கட்டளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் அருகே உள்ள காப்புக் காட்டில் தொல்காப்பியா் அறக்கட்டளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அறக்கட்டளை தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் பி.பி.கே. சிந்துகுமாா், சுரேஷ், இணைச் செயலாளா் புலவா் கு. ரவீந்திரன், ஷஞ்சய் ஷாலஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புள்ளியியல் துறை முன்னாள் துணை இயக்குநா் தா்மராஜ், ஆசிரியா் ஸ்டீபன், வணிகவரித் துறை முன்னாள் ஆய்வாளா் கோவிந்தராஜ், பிஎஸ்என்எல் பொறியாளா் மூா்த்தி, ஆசிரியை ஷோபா, ஷீலா சிந்துகுமாா் ஆகியோா் பேசினா். எழுத்தாளா் ரத்தினசாமி தங்கையன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
முன்னதாக செயலா் செ.சஜீவ் வரவேற்றாா். ஆசிரியை புஷ்பலதா நன்றி கூறினாா். இதில், வாரந்தோறும் நடைபெறும் தொல்காப்பிய பயிற்சி வகுப்புக்கு வரும் நபா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

