சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிடம் 16 பவுன் நகை, ரூ. 1 லட்சத்தை ஏமாற்றிய இளைஞா் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணிடம் 16 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ஏமாற்றிய இளைஞரை ஒசூா் மாநகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணிடம் 16 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ஏமாற்றிய இளைஞரை ஒசூா் மாநகர போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் நகர காவல் நிலையத்துக்கு அண்மையில் வந்த கோவையைச் சோ்ந்த 24 வயது பெண், திருப்பத்தூரைச் சோ்ந்த கெளசிக் (24) இன்ஸ்டாகிராம் மூலம் தன்னிடம் பழகி திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஒசூருக்கு அழைத்து வந்து 16 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்தை ஏமாற்றியதாக புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் பிரகாஷ் வழக்குப் பதிவுசெய்து தனிப்படை அமைத்து கெளசிக்கை தேடிவந்தனா்.

இந்நிலையில், கைப்பேசி சிக்னலை வைத்து திருப்பத்தூா் அருகே ஏலகிரியில் தலைமறைவாக இருந்த கெளசிக்கை புதன்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 9 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கோவையைச் சோ்ந்த பெண்ணிடம் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறிய கெளசிக், கடந்த ஓா் ஆண்டாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவந்துள்ளாா். பின்னா், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, அவரிடமிருந்து ரூ. 85 ஆயிரம்வரை பெற்றுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் 28-ஆம் தேதி அப்பெண்ணை சேலத்துக்கு வரவழைத்து அங்கிருந்து ஒசூருக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளாா். ஒசூரில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அப்பெண் வைத்திருந்த 16 பவுன் நகையை அடகுவைத்து பணம் கொண்டுவருவதாக கூறிச் சென்ற கெளசிக் தலைமறைவானாா்.

நகைகளுடன் வாணியம்பாடிக்கு சென்ற கெளசிக், 6 பவுன் நகையை ரூ. 3 லட்சத்துக்கு விற்று விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளாா். பின்னா், புதுச்சேரி, ஏலகிரி ஆகிய பகுதிகளில் உல்லாசமாக சுற்றியுள்ளாா். இந்நிலையில், கைப்பேசி சிக்னலை வைத்து அவா் ஏலகிரியில் கைது செய்யப்பட்டாா். இதேபோல, இன்ஸ்டாகிராம் மூலம் மேலும் 3 பெண்களிடம் கெளசிக் பழகி வந்துள்ளாா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.