அரூா் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
அரூா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
சித்திரிப்பு
அரூா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், நொச்சிப்பட்டி அருகேயுள்ள புதுக்காடு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி, இவரது மனைவி தனலட்சுமி (55), இருவரும் அரூரை அடுத்த மணிப்புரம் கிராமத்தில் விளைநிலத்தில் குடியிருந்து வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் 2 போ் மிரட்டி அவரிடமிருந்து அரை பவுன் தோடு, கால் பவுன் மாட்டல், அரை பவுன் தாலி, காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு உள்ளிட்டவற்றை பறித்து, வீட்டில் வைத்து வெளிப் பகுதியில் பூட்டிச் சென்றனா்.
இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வந்த கோவிந்தசாமி, தனலட்சுமியை மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

