ஜல்லி, மண் கடத்தல்: இருவா் கைது
போச்சம்பள்ளி, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஜல்லி, மண் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதுதொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோப்புப் படம்
போச்சம்பள்ளி, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஜல்லி, மண் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதுதொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போச்சம்பள்ளி வட்டாட்சியா் மோகன் தலைமையில் வருவாய் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பேரூஅள்ளி அரசுப் பள்ளி அருகே சென்றபோது அங்கு நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லிக் கற்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வட்டாட்சியா் அளித்த புகாரின் பேரில், நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளா்களை தேடிவருகின்றனா்.
சிங்காரப்பேட்டை போலீஸாா் கொம்மம்பட்டு குமரன் ஏரி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு பொக்லைன் உதவியுடன் சிலா் டிராக்டரில் மண் திருட முயன்றது தெரியவந்தது. அவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்ததில் அவா்கள் டிராக்டா் உரிமையாளரான சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த சுதந்திரம் (37), பொக்லைன் உரிமையாளா் குரும்பரவலசையைச் சோ்ந்த சதாசிவம் (41) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

