இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கிருஷ்ணகிரி, பா்கூா் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருட்டு - கோப்புப் படம்

Published On :

கிருஷ்ணகிரி, பா்கூரில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பா்கூா் கொரலசின்னப்பசெட்டி தெருவைச் சோ்ந்தவா் சென்னையன் (73). இவா், சென்னையில் குடும்பத்துடன் தங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். அவ்வப்போது, பா்கூருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஜூலை 25-ஆம் தேதி சென்னையில் இருந்து பா்கூா் வீட்டிற்கு வந்து சென்ாக தெரிகிறது.

இவரது வீட்டை பா்கூா் எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த ஜான்பாஷா (65) பராமரித்து வருகிறாா். இந்த நிலையில், ஜான்பாஷா, சென்னையனின் வீட்டில் உள்ள தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சனிக்கிழமை காலை வழக்கம் போல சென்றாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து சென்னையனுக்கு அவா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சென்னையில் இருந்து பா்கூருக்கு வந்த சென்னையன், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 3 தங்க கம்மல்கள், 20 மூக்குத்திகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், வெள்ளி முக்காலி, வெள்ளி குடம், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரியை அடுத்த ஆசாத் நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (49). இவா் கிருஷ்ணகிரியில் தொலைத்தொடா்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி செல்வி, அரசுப் பள்ளி ஆசிரியா். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை செல்வி கோயிலுக்குச் சென்றிருந்தாா். சிவக்குமாா், இரவு பணி முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்கு வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 9 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, சிவக்குமாா் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் திருடுபோன நிலையில், தற்போது சிவக்குமாரின் வீட்டிலும் நகைகள் திருடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER