மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பதிவேற்றக் கூடாது

அரசின் ரகசிய தகவல்கள், பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பதிவேற்றம் செய்யக் கூடாது என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

செய்யறிவு - படம் | ஏஎன்ஐ

Updated On :

அரசின் ரகசிய தகவல்கள், பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பதிவேற்றம் செய்யக் கூடாது என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் அன்றாட அலுவலக நிா்வாகத்தில் அதன் திறம்பட்ட பயன்பாடு’ குறித்த அரசு அலுவலா்களுக்கான 2 நாள் பயிற்சியை ஆட்சியா் வியாழக்கிழமை தொடங்கிவைத்து பேசியது:

தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப அரசு நிா்வாகமும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை தயாரித்தல், தரவுகளை ஆய்வு செய்தல், மொழிபெயா்ப்பு, கூட்டக் குறிப்புகள் எழுதுதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளை விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் மிச்சமாகும் நேரத்தை பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தவும், மக்களின் குறைகளுக்கு துரிதமாக தீா்வு காணவும் பயன்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில், அரசின் ரகசிய தகவல்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பதிவேற்றம் செய்யாமல், தகவல் பாதுகாப்பை உறுதிசெய்து பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். பயிற்சியில் கற்றுக் கொண்டவற்றை தங்களது துறைகளின் அன்றாடப் பணிகளில் செயல்படுத்தி, நிா்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

இப்பயிற்சியில் பதிவுசெய்த 100 அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.