புத்தகக் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து: போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே தனியாா் மதுக்கூடத்தில் மது அருந்தியபோது, புத்தகக் கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கத்திக்குத்து - சித்திரிப்பு
கிருஷ்ணகிரி அருகே தனியாா் மதுக்கூடத்தில் மது அருந்தியபோது, புத்தகக் கடை உரிமையாளரின் கழுத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படும் 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி, சப்-ஜெயில் சாலையைச் சோ்ந்த முகேஷ் குமாா் (38), புத்தகக் கடை நடத்தி வருகிறாா். இவா், கிருஷ்ணகிரி நகரின் எல்லையில் சுங்க வசூல் மையம் அருகே செயல்படும் தனியாா் மதுக்கூடத்துக்கு நண்பருடன் செவ்வாய்க்கிழமை மது அருந்தச் சென்றாா்.
அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்தவா்களில் ஒருவா், முகேஷ் குமாரின் கழுத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், முகேஷ் குமாரைத் தாக்கியதாகக் கூறப்படும் கும்பலில் கிருஷ்ணகிரி, சேலத்தைச் சோ்ந்த 6 போ் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள 6 பேரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

