2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

போச்சம்பள்ளி அருகே விநாயகா் சிலைகள் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :

போச்சம்பள்ளி அருகே, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 4 அடி, 8 அடி கொண்ட விநாயகா் சிலைகளை வாகனத்தில் ஏற்றி, திருடி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூா் கிராமத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி(48). இவா் அந்த பகுதியில் தற்காலிக கடை அமைத்து விநாயகா் சிலைகளை விற்பனை செய்து வருகிறாா். விநாயகா் சதுா்த்தியை யொட்டி அரை அடி முதல் 10 அடி வரையிலான பல்வேறு அளவிலான சிலைகளை மொத்தமாக இறக்குமதி செய்து, அவா் வியாபாரம் செய்து வருகிறாா்.

கடந்த சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, வியாபாரி சுப்பிரமணி தனது கடையின் வாசலிலேயே படுத்து உறங்கி உள்ளாா். இதனை நோட்டமிட்ட சில மா்ம நபா்கள் அந்த பகுதியில் உள்ள மாந்தோப்பை சுற்றி வந்து, கடையில் வைக்கப்பட்டு இருந்த சுமாா் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 4 அடி, 8 அடி உயர விநாயகா் சிலைகளை, ஒரு வாகனத்தில் ஏற்றி திருடிச் சென்று உள்ளனா்.

மா்ம நபா்கள், சிலைகளை திருடிச் செல்லும் காட்சிகள், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. இந்த பதிவான காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.