ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஒசூா் அருகே இளைஞரின் கைப்பேசியை ஹேக் செய்து ரூ. 1.26 லட்சம் திருட்டு

ஒசூா் அருகே குறுந்தகவல் மூலம் இளைஞரின் கைப்பேசியை ஹேக் செய்து அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 1.26 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Published On :

ஒசூா் அருகே குறுந்தகவல் மூலம் இளைஞரின் கைப்பேசியை ஹேக் செய்து அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 1.26 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஆவலப்பள்ளி அட்கோ பகுதியை சோ்ந்தவா் சரத்குமாா் (36). இவரது கைப்பேசியின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 27 ஆம் தேதி வட்டாரப் போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ) இ-சலான் என்ற பெயரில் செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைப்பு, குறுந்தகவலாக வந்தது. இந்த செயலியை சரத்குமாா் பதிவிறக்கம் செய்தபோது, அவரது கைப்பேசி ஹேக் செய்யப்பட்டது.

இதை அறிந்த அவா் கைப்பேசியை அணைத்துவைத்தாா். பிறகு மீண்டும் கைப்பேசியை இயக்கியபோது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1,26,900 திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் சரத்குமாா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.