70 சத குழந்தைகள் ரத்த சோகையால் பாதிப்பு

தாய்ப்பால் கொடுக்காததால் 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 70 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால்
70 சத குழந்தைகள் ரத்த சோகையால் பாதிப்பு

தாய்ப்பால் கொடுக்காததால் 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 70 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் மருத்துவர் ப.ரங்கநாதன்.
 அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா நாமக்கல் அருகே லக்கமநாயக்கன்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 விழாவிற்கு தலைமை வகித்த சங்கத் தலைவர் மருத்துவர் பி.ரங்கநாதன் பேசியது: உலகில், எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம். பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் 50 சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் வழங்கப்படுகிறது.
 20 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதத்தில் இருந்து 3 வயது வரை சரிவிகித உணவு கிடைக்கிறது. 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 70 சதவீதம் குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டள்ளனர்.
 50 சதவீதம் கர்ப்பிணி பெண்கள், ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்ற குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதுவே குழந்தையின் முதல் தடுப்பூசி, 6 மாதம் முடியும் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு தேவையில்லை. குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 சுகாதாரத்தைப் பேணும் வகையில், வீட்டுத்தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறி, கீரை வகைகளை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும். பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்தைக் காட்டிலும், கறிவேப்பிலை, முருங்கைக் கீரையில் அதிக சத்து உள்ளது. அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் முழு சுகாதாரத்தைப் பேணிக் காத்தால் நோயின்றி வாழலாம் என்றார்.
 மருத்துவர்கள் கண்ணன், ரகு, சிவக்குமார், ஊர் முக்கியப் பிரமுகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கிராமப்புறத்தில் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில், 100-க்கும் மேற்பட்ட வீடுகளில், பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com