பணி இடமாறுதல் கலந்தாய்வில் அரசு உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை, மேலும் வெளிப்படைத்தன்மையும் இல்லை. இதனால் மாறுதல் கலந்தாய்வில் அளிக்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் சங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலர் ஜெயரத்தினகாந்தி தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாளர் கலையரசன், துணைத் தலைவர்கள் செங்கோட்டுவேல், சங்கர், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்குக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அந்த மனு விவரம், பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதில் வட்டாரக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மட்டுமே இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒரே இடத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை.
எனவே கல்வித்துறையில் அனைத்து அலுவலகங்களிலும் பணியாற்றும் பணியாளர்களை சமமாக நடத்தி, மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தி, கல்வித்துறை விதிமுறைகளின்படி இடமாறுதல் அளிக்க வேண்டும். இப்போது நடந்த மாறுதல் கலந்தாய்வில் அளிக்கப்பட்டுள்ள இடமாறுதல் ஆணைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

