தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு

தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயருக்கு பல்வேறு வேளாளர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:54 am IST

தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயருக்கு பல்வேறு வேளாளர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனு அளித்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள கொங்கு வேளாளர், சோழிய வேளாளர் சமூகங்களைச் சேர்ந்த 5 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், பள்ளன், வாதிரியான் மற்றும் தேவேந்திர குலத்தான் ஆகிய சமூகப் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக, சாதக, பாதகங்கள் குறித்து அறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சியர்களை அரசு கேட்டுள்ளதாக அறிந்தோம்.
வேளாளர் என்பது எங்கள் சமுதாயம் உள்பட இன்னும் குறிப்பிட்ட சில சமுதாயங்களுக்கு உரித்தான ஒரு இனப் பெயர். காலம் காலமாக இந்த பெயரால் எங்கள் சமுதாயம் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.
எங்கள் சமுதாயத்துக்கு உண்டான கல்வெட்டு, செப்பு பட்டயம் போன்ற வரலாற்று ஆவணங்களிலும், பிரிட்டிஷ் ஆவணங்களிலும் வேளாளர் என்ற பெயர் எங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சமுதாயத்தினரோ, அவர்களின் மற்ற பிரிவினரோ எந்தக் காலத்திலும், வேளாளர் என்ற பெயரால், வரலாற்று ஆவணங்களிலோ குறிப்பிடவில்லை. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்னும் பிற சமுதாய அமைப்புகளின் வேளாளர் பெயர் கோரிக்கை நியாயமில்லாத கோரிக்கை.
அதனால் தேவேந்திரகுல வேளாளர்கள் என்று வேளாளர் என்ற பெயரை அவர்கள் சமுதாயத்துக்கு வழங்குவதற்கு எங்கள் சமுதாயம் பலத்த எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்துகிறோம்.
அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் 2 கோடி வேளாளர்களின் வரலாற்று, கலாசார உரிமைகள் பாதிக்கப்படும் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.