சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் மரண தண்டனை வழங்கக்கோரி பரமத்தி வேலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பரமத்தி வேலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயதே ஆன மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு விசாரணையின்றி மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அரசும், போலீசாரும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் இச் சங்கத்தின் பொருளாளர் கதிர்வேல், மனவளர்ச்சி குன்றியோர் பெற்றோர்கள் அமைப்பின் தலைவி சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காணிக்கையாக சிலைகள்!

மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது? அமைச்சர் வினோத் பதில்!

யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தை! ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள்!

கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டு!
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |


