பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே வீட்டில் சோலார் மின்தகடு அமைப்பதாகக் கூறி பீரோவில் இருந்த ஏழரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பானுமதி. இவர்களது வீட்டில் சோலார் மின்தகடு அரசு மானியத்துடன் பொருத்தித் தருவதாக கடந்த வியாழக்கிழமை மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார். இதற்காக மின்தகடு மற்றும் பேட்டரிகள் அமைக்கும் இடத்தையும் குறிப்பிட்டு, நாளை வருவதாக கூறி ரூ.500 முன் தொகையாக வாங்கிச் சென்றுள்ளார். பின்னர், வெள்ளிக்கிழமை காலை வந்த மர்ம நபர் வயர்கள் அமைக்கும் இடங்களையும், வயர்களை வீட்டுக்கு வெளியே இழுத்துச் செல்லும் படியும் தங்கவேல் மற்றும் பானுமதியிடம் கூறியுள்ளார். அப்போது வீட்டினுள் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த ஏழரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை திருடிக்கொண்டு, போதிய அளவு வயர் இல்லை. நாளை வந்து பார்ப்பதாகக் கூறிச் சென்றுள்ளார். சனிக்கிழமை மாலை பீரோவைத் திறந்து பார்த்த போது, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து பானுமதி ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








