குமாரபாளையத்தில் ஆதரவற்றுத் திரிந்த யாசகர்கள் 16 பேர் மீட்பு

குமாரபாளையம் நகரத் தெருக்களில் ஆதரிப்போர் இல்லாமல் சுற்றித் திரிந்த யாசகர்கள் 16 பேர் மீட்கப்பட்டு

குமாரபாளையம் நகரத் தெருக்களில் ஆதரிப்போர் இல்லாமல் சுற்றித் திரிந்த யாசகர்கள் 16 பேர் மீட்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள காப்பகத்துக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.
குமாரபாளையம் நகரப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில், தெருக்களில் யாககர்கள் சுற்றித் திரிந்தனர். நோயால் பாதிக்கப்பட்டும்,  சுகாதாரமின்றியும், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உணவுக்கு கையேந்தியபடியும், பேருந்து நிலைய வளாகத்திலும் தங்கியிருந்தனர்.
இவர்களை, அட்சயம் அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனம், கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து காப்பகங்களுக்கு அனுப்பி பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நம்ம குமாரபாளையம் அமைப்புடன் இணைந்து குமாரபாளையத்தில் அட்சயம் அமைப்பு தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களைக் கண்டறியும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில்  உணவு, தங்குமிடம் இல்லாமல் வாழ்ந்துவந்த ஆதரவற்ற முதியோர்கள் 16 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் பலர் வயது முதிர்ந்தும், உறவினர்கள், குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்க்கை நடத்துவது தெரியவந்தது.
அவர்களை மீட்டதோடு,  முதியோர்களுக்கு முகச் சவரம் செய்து குளிக்கச் செய்து, சுத்தப்படுத்தினர். மேலும், சுத்தமான ஆடைகளை  அணிவித்தனர். தொடர்ந்து, இவர்களை விழுப்புரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் நவீன்குமார் தலைமை வகித்தார். நம்ம குமாரபாளையம்  அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓம் சரவணா முன்னிலை வகித்தனர். 
குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.சேகர், திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன், அதிமுக நகரச் செயலர்  ஏ.கே.நாகராஜன், மகாத்மா காந்தி சமூக சேவை அமைப்புத் தலைவர் என். நாச்சிமுத்து, மக்கள் நீதி மய்யம்  கட்சி நகரப் பொறுப்பாளர் அறிவாளி சரவணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மொத்தம் 2 பெண்கள் உள்பட  16 ஆண்கள் மீட்கப்பட்டனர். இவர்களில், அந்தியூரைச் சேர்ந்த மதுப்பழக்கத்துக்கு அடிமையான சுமார் 51  வயது பெண்ணையும், பெருந்துறையைச் சேர்ந்த 60 வயது முதியவரையும் அவரது  உறவினர்கள் வந்து தாங்களே  பராமரித்துக் கொள்வதாகக் கூறினர். இறுதியில், ஒரு பெண் உள்பட 14 பேர் காப்பகத்துக்கு வாகனம் மூலம்  அழைத்துச் செல்லப்பட்டு
சேர்க்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com