மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் அதன் தலைவர் கே.சிங்காரம் தலைமையில் வெண்ணந்தூரில் அண்மையில் நடைபெற்றது. துணைத் தலைவர் வி.காசிபெருமாள், செயலர்கள் எம்.எ.வெங்கடாசலம், பி.கே.செங்கோடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வெண்ணந்தூர் பேரூராட்சியை தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக, காங்கிரஸ் கூட்டணி தலைவர்களை கேட்டுக்கொள்வது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
வெண்ணந்தூர் பேரூராட்சியில் வீட்டுக்கு 50 சதவீதம், வணிக வளாகங்களுக்கு 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, இந்த வரி உயர்வை குறைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்ணந்தூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனைத் தவிர்க்க, அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். வெண்ணந்தூர்-ஆட்டையாம்பட்டி பிரதான சாலையில் நாச்சிப்பட்டி பிரிவு சாலையில் தொடர்ந்து நிகழும் விபத்துகளை தவிர்க்க, நாச்சிப்பட்டி பிரிவு சாலை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


