"தேர்தல் செலவு கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்'
By DIN | Published On : 01st April 2019 10:24 AM | Last Updated : 01st April 2019 10:24 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவின கணக்குகளை, தேர்தல் பார்வையாளர்கள் முன் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும்அலுவலரும், ஆட்சியருமான மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 3, 9 மற்றும் 15-ஆம் தேதிகளில் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை, செலவினப் பார்வையாளர்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்.
அ.தி.மு.க., கொ.ம.தே.க., அ.ம.மு.க., வேட்பாளர்கள் உள்பட 29 வேட்பாளர்களும் மேற்கண்ட தேதிகளில் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் நேரில் வரமுடியாதபட்சத்தில், முகவர்கள் மூலம் தேர்தல் செலவின பதிவேட்டினை (உரிய ஆவணங்களுடன்) செலவினப் பார்வையாளர் முன் சமர்ப்பிக்கலாம்.
அவ்வாறு பதிவேடு மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77-ஆம் பிரிவில் குறிப்பிட்டபடி தேர்தல் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.