நகை திருட்டு: பெண் கைது
By DIN | Published On : 01st April 2019 10:22 AM | Last Updated : 01st April 2019 10:22 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், மோகனுர் வட்டம், கிராயூரைச் சேர்ந்தவர் சந்திரன் (52). இவர், ஒருவந்தூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
கடந்த 26-ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வழக்கம்போல் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றார். அன்று பிற்பகல் மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தபோது, நுழைவாயில் கதவுத் திறந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்தபோது அதிலிருந்த 8.25 பவுன் நகை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மோகனூர் காவல் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே மோகனூர் பேருந்து நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை காவல் ஆய்வாளர் சுகுமார் ரோந்து மேற்கொண்டிருந்தார். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தொடர் விசாரணையில், அவர் கரூர் மாவட்டம், வெங்கமேடு என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி ரமணி (29) என்பதும், ஒருவந்தூரில் வீட்டுக்குள் புகுந்து நகை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.