வாகனச் சோதனை: ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்
By DIN | Published On : 01st April 2019 10:23 AM | Last Updated : 01st April 2019 10:23 AM | அ+அ அ- |

குமாரபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையத்தை அடுத்த ஓடப்பள்ளி - சோலார் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் எழிலரசு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஈரோடு, சோலார் செந்தூர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரதீப்குமார் என்பவரிடம் சோதனை நடத்திய போது ரூ.1 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது.
இப்பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து குமாரபாளையம் வட்டாட்சியர் தங்கத்திடம் ஒப்படைத்தனர்.