முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கம்
By DIN | Published On : 04th August 2019 05:08 AM | Last Updated : 04th August 2019 05:08 AM | அ+அ அ- |

ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் ஒருநாள் சர்வதேசக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
தொடக்க விழாவில், கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் பி. வசுமதி வரவேற்றார். கல்லூரியின் புலமுதன்மையர் (நிர்வாகம்) ஆ.ஸ்டெல்லா பேபி அறிமுகவுரையாற்றினார். கல்லூரி செயலாளர் முத்துவேல் ராமசுவாமி தலைமை வகித்தார். அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக சூழ்நிலை, பரிணாம உயிரியல் துறைப் பேராசிரியிர்
ஆர்.அருணாசலம் ராமையா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காசநோய் கிருமிகளால் நுரையீரல்கள் பாதிக்கப்படுதல், அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள், பாக்டீரியா, டி.என்.ஏ. எதிர்ப்புச் சக்தி மற்றும் பல்வேறு நோய்த்தடுப்பு வழிமுறைகள் குறித்து பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் எஸ். சிவசத்யா, நியூக்ளிக் செல்ஸ், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, மனித மரபணு திட்டம், மரபணு வங்கி, ஜப்பானிய டி.என்.ஏ. தகவல் வங்கி, வரிசை மற்றும் பல்வரிசை சீரமைப்பு, வன்கணினி மற்றும் மென்கணினி, கணினியின் அடிப்படையான அல்காரிதம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் எம். ரவி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...