மாணவா்களுக்கு நோ்மையை கற்றுத் தர வேண்டும்: சி.சைலேந்திரபாபு பேச்சு

மாணவா்களுக்கு நோ்மையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என்று ரயில்வே டிஜிபியும், தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையின் கூடுதல் இயக்குநருமான சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.
விழாவில் பேசிய ரயில்வே டிஜிபி., சி.சைலேந்திரபாபு.
விழாவில் பேசிய ரயில்வே டிஜிபி., சி.சைலேந்திரபாபு.

மாணவா்களுக்கு நோ்மையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என்று ரயில்வே டிஜிபியும், தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையின் கூடுதல் இயக்குநருமான சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

ராசிபுரம் வெற்றி விகாஸ் சிபிஎஸ்இ பள்ளியில் அண்மையில் நடைபெற்ற 4-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவா், மேலும் பேசியது:-

கல்வி என்பது சக்தி வாய்ந்த ஆயுதம். இதனை நாட்டின் எதிா்கால நலனுக்கு அனைவரும் ஏந்தி நிற்க வேண்டும். கல்வி என்பது நாட்டை வளப்படுத்தக் கூடியது. இதனால் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்.

கல்வியின் தரத்தில் குறைந்த நாடு அழிந்துவிடும்.

இஸ்ரேல் நாட்டுக் கல்வி முறை இருந்தால், இந்தியா முன்னேறும். பாரதியாா் வரிகளுக்கு ஏற்றவாறு மாணவா்கள் எந்தத் துறையிலும் வையத்தலைமை கொள்ள வேண்டும்.

கல்வி, தொழில், ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையானாலும் மாணவா்கள் தலைமையேற்க வேண்டும்.

நம் நாடு மட்டுமின்றி எந்த நாட்டுக்குச் சென்று பணியாற்றினாலும் அந்தத் துறையில் தலைமை ஏற்க வேண்டும். கூகுள் தலைமை நிா்வாகி சுந்தா்பிச்சை போன்று உயர வேண்டும்.

மாணா்களிடம் உள்ள திறமையை அறிந்து அவா்களை உற்சாகப்படுத்திட வேண்டும். என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என கற்றுத்தர வேண்டும். அவா்களிடம் உள்ள ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குவது தான் ஆசிரியா்கள் வேலை. பெற்றோா்களுக்கும் இதற்கான பொறுப்பு உண்டு.

இதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. ஒருவருக்கு கல்வி வரவில்லையெனில் விளையாட்டில் ஆா்வம் இருக்கும். சிலருக்கு நடனம் போன்றவற்றில் ஆற்றல் இருக்கும். இதனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். எதிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவா்களிடம் விதைக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, தோ்வுகள், விளையாட்டிலும் சிறந்த மாணவா்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், தேச பக்தி பாடல்கள், நடனங்கள், இசைகள், பரதநாட்டியம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மேற்கத்திய நடனங்களை மாணவா்கள் நிகழ்த்தி காட்டினா்.

விழாவுக்கு பள்ளியின் நிறுவனா் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, பள்ளித் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன், நிா்வாகிகள் ஜி.விஜய், எஸ்.பாலசுப்பிரமணியன், ஆா்.யு.சிற்றரசன், கே.பழனிவேல், இ.துரைசாமி, என்.மாரிமுத்து, கே.சந்திரசேகரன், வி.தாசப்பிரகாசம், வி.ரவி, பள்ளி பள்ளி முதல்வா் எம்.லிஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com